
Shanu
யுக்ரேன் மீதான ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்காக, சௌதி அரேபியாவில் சந்திக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளார்
இந்த முக்கிய சந்திப்பு நடக்கும் இடமாக சௌதி அரேபியாவை டிரம்ப் ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளதுடிரம்ப், இந்த சந்திப்பு எப்போது நடக்கும் என்று கூறவில்லை. இருப்பினும் மிக விரைவாக இது நடக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் சௌதி இளவரசரும் பங்கேற்கலாம் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புதின், யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கியுடன் டிரம்ப் அலைபேசியில் தனித்தனியாக பேசிய சில மணி நேரங்களில் இந்த அறிவிப்பு வெளியானது.