
Shanu
கனடா, பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியினரை தொடர்ந்து நிராகரித்துவருவதுபோல் தெரிகிறது.கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தான் கனடா பிரதமர் பதவிக்காக போட்டியிட இருப்பதாக இந்திய வம்சாவளியினரான சந்திரா ஆர்யா தெரிவித்திருந்தார்.
ஆனால், ஜஸ்டின் ட்ரூடோவின் லேபர் கட்சி, கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிட, அவருக்கு அனுமதி மறுத்துவிட்டது.
இந்நிலையில், அவரையும் ஜஸ்டின் ட்ரூடோவின் லேபர் கட்சி, கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடவிடாமல் செய்துள்ளது.தலைமைப் பதவிக்கு போட்டியிடுவதிலிருந்து தான் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோவின் லேபர் கட்சி சற்றுமுன் அறிவித்ததாக ரூபி தெரிவித்துள்ளார்.
தான் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த செய்தியுடன், அந்த அறிவிப்பு ஊடகங்களுக்கு லீக் செய்யப்பட்டதாலும் தான் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளதாக ரூபி தெரிவித்துள்ளார்.ஒரு நாள் வெளிநாட்டின் தலையீடு என்றும், இன்னொரு நாள் பிரச்சார விதிகளை மீறியதாகவும் ஏதாவது காரணம் கூறுவதாக தெரிவிக்கும் ரூபி, Mark Carney என்பவர் கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிட தான் தடையாக இருப்பதாலேயே இந்த நடவடிக்கை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே, பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியினரை கனடா தொடர்ந்து ஏதாவது காரணம் காட்டி நிராகரித்துவருவது தெரிகிறது.