Homeஇலங்கை

சஞ்சீவ கொலை - துப்பாக்கிதாரியின் வட்ஸ்அப் குறுந்தகவல்கள் வெளியானது

சஞ்சீவ கொலை - துப்பாக்கிதாரியின் வட்ஸ்அப் குறுந்தகவல்கள் வெளியானது

Shanu

பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு முன்னர், துப்பாக்கிச் சூடு நடத்தியவர், வெளிநாட்டில் இருந்து கொலையைத் திட்டமிட்ட சலிந்த என்ற நபரை வட்ஸ்அப் மூலம்  தொடர்பு கொண்டமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, “நீ வேலையைச் செய்” எனவும், எல்லாம் சாதகமாகவுள்ளது. பயப்படாதே சுடு! எனவும்  சலிந்த கூறியுள்ள குறுந்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த குறுந்தகவல் விபரம் பின்வருமாறு,

துப்பாக்கிதாரி, “உள்ளே ஏதாவது பிரச்சனையா?”, “நான் உள்ளே இருக்கிறேன்” என்றார்.

இல்லை , வா, நீ தயாராகு?” முடித்து விடு “எல்லாம் சரியாக  இருக்கிறது” என்றார் சலிந்த.

துப்பாக்கிதாரி, “அப்படியானால் பொலிஸார்?” என்று கூறியபோது,

காலை 9.48 மணியளவில், சலிந்த, “எல்லாம் நன்றாக இருக்கிறது”  “நீ முடித்து விடு” என்று பதிலளித்துள்ளார்.

பின்னர், காலை 9.54 மணியளவில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சலிந்தவுக்கு தொலைபேசி அழைப்பினை விடுத்துள்ளார்.

பின்னர்  “அவன் இறந்துவிட்டானா?” என்று கேட்டுள்ளார்.

“ஆமாம்” என்று சலிந்தவுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்  பதிலளித்துள்ளார்.”அருமை” என்று பதிலளித்த பிறகு, “நீ என் உயிர்” என்று சலிந்த பதிலளித்துள்ளார். 

“ஏன் இப்படி கூறுகின்றீர்கள்,  ”நீங்கள் எனக்கு உணவளித்து, ஒரு தந்தையைப் போல என்னைக் கவனித்துக் கொண்டீர்கள். எனவே நீங்கள் என் சகோதரர்” என துப்பாக்கிதாரி கூறியுள்ளார்.

சகோதரி இன்னும் அங்கேயே தான் இருக்கிறாள். “நான் வந்துவிட்டேன்,” என்று துப்பாக்கிதாரி மேலும் தெரிவித்துள்ளார். 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button