இந்திய - பாகிஸ்தான் 'கிரிக்கெட் போர் இன்று
இந்திய - பாகிஸ்தான் 'கிரிக்கெட் போர் இன்று

Shanu
துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் நிரம்பி வழிய உள்ள நிலையில், உலகம் முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான இரசிகர்கள் ஆவலுடனும் பரபரப்புடனும் எதிர்பார்த்துள்ள இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான மிக முக்கிய சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று.
பரம வைரிகளுக்கு இடையிலான இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் அரை இறுதியில் விளையாடுவதை உறுதிசெய்துகொள்ளும். அதேவேளை, நடப்பு சம்பியன் பாகிஸ்தான் முதல் சுற்றுடன் வெளியேறுவதடன் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான உத்வேகமும் பொலிவும் பாகிஸ்தானில் அற்றுப் போய்விடும்.இந்த இரண்டு அயல்நாடுகளுக்கு இடையில் அரசியல் பதற்றம் நிலவுவதால் ஐசிசியினால் நடத்தப்படும் பன்னாட்டு கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மாத்திரம் மோதி வருகின்றன.
இரண்டு அணிகளும் ஒன்றையொன்று வீழ்த்தி வேண்டும் என்ற வைராக்கியத்துடனேயே எப்போதும் விளையாடி வருகின்றன.
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி எட்டு வருடங்களின் பின்னர் மீண்டும் நடத்தப்படு கின்றது. அது மட்டுமல்லாமல்1996 உலகக் கிண்ணப் போட்டிக்கு பின்னர் 29 வருடங்கள் கழித்து முதல் தடவையாக ஐசிசி போட்டி ஒன்றை பாகிஸ்தான் வரவேற்பு நாடாக முன்னின்று நடத்துகின்றது.எவ்வாறயினும். பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விஜயம் செய்ய இந்திய அணிக்கு அந் நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்காததால் இந்தியா சம்பந்தப்பட்ட போட்டிகள் யாவும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நடத்தப்படுகிறது. இது ஒரு வகையில் இந்தியாவுக்கு அனுகூலமாக அமைகிறது. ஏனெனில் இந்தியா ஒரே இடத்தில் இருந்தவாறு நெடுந்தூர பயணக் களைப்பின்றி விளையாடுகிறது.
குழாம்கள்இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்) ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், கே. எல். ராகுல், ரிஷாப் பான்ட், ஹார்திக் பாண்டியா, அக்சார் பட்டேல், வொஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, மொஹமத் ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவிந்த்ர ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி. பாகிஸ்தான்: மொஹமத் ரிஸ்வான் (தலைவர்) பாபர் அஸாம், இமாம் உல் ஹக், கம்ரன் குலாம், சவூத் ஷக்கீல், தய்யப் தாஹிர், பாஹீம் அஷ்ரப், குஷ்தில் ஷா, சல்மான் அலி அகா, உஸ்மான் கான், அப்ரார் அஹ்மத், ஹரிஸ் ரவூப், மொஹம்மத் ஹஸ்னைன், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்றிடி.