அரையிறுதி அணிகளை தீர்மானிக்கும் பி குழு போட்டிகள் இன்றும் நாளையும்
அரையிறுதி அணிகளை தீர்மானிக்கும் பி குழு போட்டிகள் இன்றும் நாளையும்

Shanu
சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பி குழுவில் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளை தீர்மானிக்கும் கடைசி இரு போட்டிகளும் இன்றும் (28) நாளையும் (மார்ச் 1) நடைபெறவுள்ளன.ஆப்கானிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் லாகூரில் இன்று மோதவிருப்பதோடு தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் கராச்சியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. லாகூரில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஆப்கான் அணி 8 ஓட்டங்களால் பரபரப்பு வெற்றியை பெற்றதை அடுத்து அந்த அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது.எனினும் முதல் இரு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்திருக்கும் இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது. ஆரம்ப வீரர் இப்ராஹிம் சத்ரான் 146 பந்துகளில் 177 ஓட்டங்களை பெற்றதன் மூலம் ஆப்கான் அணி 50 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 325 ஓட்டங்களை பெற்றது. எனினும் பதிலெடுத்தாடிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 317 ஓட்டங்களையே பெற்றார். ஜோ ரூட் பெற்ற சதம் (120) வீணானது.இந்நிலையில் இன்றைய போட்டியில் ஆப்கான் வெற்றி பெற்றால் அந்த அணி நான்கு புள்ளிகளுடன் அரையிறுதியை உறுதி செய்யும். மறுபுறம் தற்போது புள்ளிப்பட்டியலில் தலா 3 புள்ளிகளுடன் முறையே முதல் இரு இடங்களில் இருக்கும் தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிக்கும் அரையிறுதிக்கு முன்னேற தனது கடைசி போட்டியில் வெற்றி பெறுவது கட்டாயமாக உள்ளது.ஏ குழுவில் இருந்து ஏற்கனவே இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.