யுவராஜ் சிங் - டினோ பெஸ்ட் வாக்குவாதம்

Shanu
ராய்ப்பூர்: 2025 இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் யுவராஜ் சிங் மற்றும் டினோ பெஸ்ட் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி வெற்றியை நெருங்கிய நிலையில் யுவராஜ் சிங் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டினோ பெஸ்ட் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரையன் லாரா, பில்லி பவுடன் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் அதை தடுத்து நிறுத்தினர்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது. அந்த அணியைச் சேர்ந்த லெண்டில் சிம்மன்ஸ் 41 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்தார். டுவைன் ஸ்மித் 35 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார்.
இதை அடுத்து அம்பயர் பில்லி பவுடன், சக வீரர் அம்பத்தி ராயுடு மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பிரையன் லாரா ஆகியோர் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து பிரித்து விட்டனர். அந்த ஓவரில் அம்பத்தி ராயுடு மற்றும் யுவராஜ் சிங் இணைந்து 12 ரன்கள் சேர்த்தனர்.இந்தப் போட்டியில் டினோ பெஸ்ட் 3 ஓவர்கள் வீசி 34 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார். அவரே அதிக ரன்களை விட்டுக் கொடுத்த பந்துவீச்சாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவராஜ் சிங் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 11 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார். இந்தியா மாஸ்டர்ஸ் அணி 17.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.