நாட்டை உலுக்கும் துப்பாக்கிச் சூடு குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு
நாட்டை உலுக்கும் துப்பாக்கிச் சூடு குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு

Shanu
நாட்டில் பாதாள உலக கும்பல்களால் தொடர்ந்து இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அவற்றில் 12 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலகக் கும்பல்களுடன் தொடர்புடையவை ஆகும்.
மேலும், 2023 ஆண்டில் 120 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அவற்றில் 65 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலகக் கும்பல்களுடன் தொடர்புடையவை என்பதுடன் 2024 ஆண்டில் 103 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அவற்றில் 56 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலகக் கும்பல்களுடன் தொடர்புடையவை ஆகும்.