விளையாட்டு

IPL டிக்கெட்டுகளில் சதி : CSK க்கு 2 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டுகோள்

Shanu

சென்னை எப்போதுமே கிரிக்கெட்டுக்கு மரியாதை கொடுக்கும் ஒரு ஊராகவே இருக்கிறது. சுமார் ஒரு கோடி பேர் உள்ள இந்த மாநகரின் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 40 ஆயிரம் பேர் பார்வையாளர்களாக அமர்ந்து பார்க்கக்கூடிய வசதிகள் இருக்கிறது.

இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதல் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை புதன்கிழமை காலை தொடங்கியது.

இதற்காக பல மணி நேரம் ஆன்லைனில் காத்திருந்து டிக்கெட்டை பெற்று விடலாம் என நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. இரண்டு மணி நேரம் ஆன்லைனில் காத்திருந்த ரசிகர்களுக்கு டிக்கெட் விற்று தீர்ந்து விட்டது என்ற செய்தி மட்டுமே கிடைத்தது. இதனால் பல ரசிகர்கள் கடுப்பாகி சமூக வலைத்தளத்தில் சிஎஸ்கே அணியை திட்டி வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஒரு ரசிகர், சிஎஸ்கே அணிக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் டிக்கெட் விற்பனை வைத்து ஏமாற்றி வருகிறார்கள் என்று கூறி இருக்கிறார். டிக்கெட்டுகள் அனைத்தும் இணையதளத்தில் விற்கப்படுவதில்லை என்றும் பாதி டிக்கெட்டுகள் தெரிந்தவர்களுக்கு வழங்கப்படுவதால் உண்மையான ரசிகர்களுக்கு போட்டியை பார்க்க முடிவதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் மற்றொரு ரசிகர் ஒருவர், 40 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய மைதானத்திற்கு ஸ்பான்சர் போன்றவர்களுக்கு பாதி டிக்கெட்டுகளை வழங்கி விடுகிறார்கள். இதனால் ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது என்று தெரிவித்திருக்கின்றார்.மேலும் மும்பை சிஎஸ்கே போட்டியை பார்க்க சேப்பாக்கம் மைதானத்தில் 40 ஆயிரம் ரசிகர்கள் மட்டுமே அமர முடியும்.

ஆனால் இந்த போட்டிக்காக ஆன்லைனில் ஒரே நேரத்தில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் பேர் காத்திருப்பதாக தெரிகிறது இது தோனியின் பவரை காட்டுவதாக ஒரு ரசிகர்கள் பதிவிட்டுள்ளார். மேலும் சிலர் சென்னை போட்டிகள் மட்டும் ஏன் இவ்வாறு நடைபெறுகிறது.

ஒவ்வொரு போட்டியையும் நாங்கள் கள்ளச்சந்தையில் வாங்கி பார்க்க வேண்டியதாக இருக்கிறது. ஒவ்வொரு டிக்கெட்டின் விலையும் ஐந்து மடங்கு பத்து மடங்கு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ரசிகர்கள் தான் கஷ்டப்படுகிறார்கள் என்று சாடி இருந்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button