வேன் விபத்து ; பாடசாலை மாணவ, மாணவிகள் உட்பட 15 பேர் காயம்
வேன் விபத்து ; பாடசாலை மாணவ, மாணவிகள் உட்பட 15 பேர் காயம்

Shanu
இரத்தினபுரி மாவட்டம் குருவிட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அடவிகந்த பகுதியில் இன்று திங்கட்கிழமை (03) காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவ, மாணவிகள் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.14 பாடசாலை மாணவ, மாணவிகளையும் பெண்ணொருவரையும் ஏற்றிச் சென்ற வேன் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் வேன் சாரதியும் 14 பாடசாலை மாணவ, மாணவிகளும் காயமடைந்துள்ள நிலையில் எரத்த கிராம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் 10 பாடசாலை மாணவ, மாணவிகள் சிகிச்சை பெற்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், காயமடைந்த ஏனைய இரு மாணவர்களும் இரு மாணவிகளும் வேன் சாரதியும் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.