Homeசினிமா

TVK தலைவர் விஜயை குறித்து உண்மையை உடைத்தார் - நடிகர் விஷால்

Shanu

அரசியல் கட்சி தலைவரான விஜய் பற்றி உண்மையை தான் சொல்லியிருக்கிறார் விஷால். இதுவே எங்களின் கருத்தும் கூட என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை துவங்கிய விஜய் வரும் 2026ம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடவிருக்கிறார். படத்தில் எதையும் துணிச்சலாக பேசும் அவர் கட்சி துவங்கிய பிறகு பட்டும் படாமல் பேசுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் கட்சி துவங்கி ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை செய்தியாளர்களை சந்திக்காமல் இருப்பது ஏன் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. இந்நிலையில் இது குறித்து விஷால் பேசியிருக்கிறார்.

விஜய் குறித்து விஷாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். விஜய் கட்சி துவங்கி ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. அவருடைய கருத்துகளை வெளிப்படையாக வைக்க மாட்டேன் என்கிறார், மறைமுகமாகவே வைக்கிறார்.மத்திய, மாநில அரசுகளை விமர்சிக்கிறார். ஆனால் மறைமுகமாக விமர்சிக்கிறார் என்கிற கருத்துகள் வருகிறது. அவரின் அரசியல் பார்வையை எப்படி பார்க்கிறீர்கள் என விஷாலிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள்.

முதலில் பிரஸ்ஸை வந்து சந்திக்கட்டுமே. நீங்க என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள். நீங்கள் அவரை தான் கேள்வி கேட்கணும். விஜய் அவர்கள் இன்னும் பிரஸ்ஸையே சந்திக்கவில்லை. பிரஸ்ஸை சந்தித்த பிறகு நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் வந்துவிடும் என்றார் விஷால். அவர் அப்படி பேசியதில் தவறே இல்லை. சரியாக பேசியிருக்கிறார் என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.

நடிகர்கள், நடிகைகள் செய்தியாளர்களை சந்திக்க தயங்குவது இல்லை. அப்படி இருக்கும்போது செய்தியாளர்களை சந்தித்து பழக்கம் உள்ள விஜய் அரசியல் கட்சி துவங்கிய பிறகு செய்தியாளர்களை ஒரு முறை கூட சந்திக்காதது ஏன்?. தேர்தலுக்கு முன்பாவது செய்தியாளர்களை சந்திப்பாரா இல்லை எக்ஸ் தளத்திலேயே கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா என சினிமா ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியலுக்கு வந்த பிறகு பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார் விஜய். பனையூர் வீட்டில் இருந்தே வேலை செய்யும் ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்வாதி, ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டு, புகைப்படம் வெளியிட்டால் அரசியல் கட்சி வேலை முடிந்தது என நினைக்கிறார். எந்த கருத்தையும் பொட்டில் அடித்தது போன்று சொல்ல தயங்குகிறார் என விமர்சிக்கப்படுகிறது. ஆனால் இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் நிச்சயம் பதிலடி கொடுப்பார் எங்கள் அண்ணன், காத்திருங்கள் என விஜய் ரசிகர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button