Homeஉலகம்விளையாட்டு

இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

Shanu

2025 சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இன்றைய தினம் (04) டுபாயில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்திய அணி, விராட் கோஹ்லி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான ஆட்டத்தால் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ஓட்டங்களைப் பெற்றது. ஸ்டீவ் ஸ்மித் 73 ஓட்டங்களையும் மற்றும் அலெக்ஸ் கேரி 61 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர். இந்தியாவின் பந்துவீச்சில் மொஹமட் சமி 3 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அதன்படி, 265 என்ற இலக்கை துரத்திய இந்திய அணி, விராட் கோஹ்லியின் அபாரமான 84 ஓட்டங்கள் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் 45 ஓட்டங்களின் உதவியுடன் 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 267 ஓட்டங்களை எட்டி வெற்றியைப் பதிவு செய்தது. அவுஸ்திரேலியா அணி சார்பில் பந்து வீச்சில் நாதன் எலிஸ் மற்றும் அடம் சம்பா ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இரண்டாவது அரையிறுதிப் போட்டி நாளைய தினம் (04) லாகூரில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இதில் வெற்றிப் பெறும் அணியுடன் இந்திய அணி இறுதிப் போட்டியில் மோதவுள்ளது..

இறுதிப் போட்டி எதிர்வரும் 09 ஆம் திகதி டுபாயில் இடம்பெறவுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button