
Shanu
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வேறலெவல் ஹிட்டடித்துள்ளதால், படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். இதனால் படமும் பிரம்மாண்ட வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடைசியாக ‘மார்க் ஆண்டனி’ ரிலீசானது. இப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. இதனையடுத்து தற்போது ‘குட் பேட் அக்லி’ படத்தினை இயக்கியுள்ளார் ஆதிக். அஜித்தின் தீவிர ரசிகர் இவர் என்பதால், தரமான பேன் பாய் சம்பவமாக இப்படம் உருவாகி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘விடாமுயற்சி’ டீசர் யூடியூபில் 14 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது. இதனுடன் ஒப்பிடும் போது ‘குட் பேட் அக்லி’ 24 மணி நேரத்திலே 32 மில்லியன் பார்வையாளர்களை பெற்று பிரம்மிக்க வைத்துள்ளது. தற்போது 33 மில்லியன் பார்வைகளை கடந்து 34 மில்லியனை நெருங்கி வருகிறது.