இலங்கை
இ.தொ.காவின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

Shanu
நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை, மஸ்கெலியா ஆகிய இரண்டு பிரதேச சபைகளுக்கான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இந்த வேட்பு மனுக்களை இ.தொ.காவின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், கொத்மலை, மஸ்கெலியா பிரதேச சபைகளுக்காக இ.தொ.காவினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் காணப்பட்ட முரண்கள் காரணமாக அவை நிராகரிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.