இந்தியா
Trending

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்த முதல் நொடியில் ஶ்ரீரங்கம் பெரியார் சிலையை அகற்றுவோம் – அண்ணாமலை…!!

தமிழ்நாடு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது பாதயாத்திரையின் போது நேற்றைய தினம் ஶ்ரீரங்கத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றினார். இதன்போது அவர் கூறியதாவது…

என் மண் என் மக்கள் யாத்திரையில் 100-வது தொகுதி, அரங்கநாத பெருமாள் இருக்கிற ஶ்ரீரங்கம் தொகுதியில் நடைபெறுகிறது. அரங்க பெருமாளின் உத்தரவு 100-வது தொகுதியாக இங்கே வரவேண்டும் என்பதாக இருக்கிறது. இயற்கையாகவே 5 தொகுதிகளை ஒத்திவைத்து 100-வது தொகுதியாக அரங்க பெருமானின் மண்ணுக்கு வர வேண்டும் என அவர் முடிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் 30 மாத திமுக ஆட்சி அனைத்து மக்களுக்கும் எதிரானது. 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதே ஶ்ரீரங்கம் கோவிலில் ஒரு பலகையை வைத்திருக்கின்றனர். கடவுளை நம்புகிறவன் முட்டாள், ஏமாளி, அதனால் கடவுளை யாரும் நம்பாதீங்கன்னு தமிழகத்தில் இருக்கிற எல்லா கோவில்களிலும் இதேபோல ஒரு கம்பத்தை வைத்து பலகையை வைத்துள்ளனர். ஆனால் இந்துக்கள் நாம் அமைதியான வழியில் அறவழியில் வாழ்க்கையை வாழ்கிறோம்.

இந்த ஶ்ரீரங்கம் மண்ணில் இருந்து பாரதிய ஜனதா கட்சி உறுதி எடுத்து கொள்கிறது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி வரும்பொழுது முதல் வேளையாக அந்த கம்பத்தை அப்புறப்படுத்துவது; நம்முடைய ஆழ்வார்களில் இருந்து நாயன்மார்களில் இருந்து அவர்களுடைய சிலைகள் அங்கே வைக்கப்படும்.

தமிழ்ப் புலவர்களுடைய சிலைகள் வைக்கப்படும். தமிழ்ப் புலவர் திருவள்ளுவர் சிலை வைக்கப்படும். நம்முடைய சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட வீரர்கள் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுடைய சிலையை வைப்போம். கடவுளை நம்புகிறவன் முட்டாள் என சொல்லக் கூடிய சிலையை பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த முதல் நொடியிலேயே தமிழகத்தில் இருக்கிற அனைத்து கோவில்களிலும் அகற்றிக் காட்டும்.

சனாதன தர்மம் ஒழிய தமிழகத்தில் அத்தனை கட்சிகளுமே காரணம். அதேபோல இந்து அறநிலையத்துறை என்கிற அமைச்சரவையும் இருக்காது. இந்துசமய அறநிலையத்துறையின் கடைசிநாள், தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும் முதல் நாளாக இருக்கும். அன்று மருது பாண்டியர்களின் ஜம்பு தீவு பிரகடனம் போல இது என் மண் என் மக்கள் யாத்திரையின் பிரகடனம். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button