உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். அதேபோல், கமல்ஹாசனும் தனது திரையுலக நண்பர்களுக்கு விருந்துகொடுத்து அசத்தினார்.
இந்நிலையில், பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்தவர்களுக்கு தனது டிவிட்டரில் உருக்கமாக நன்றிக் கூறியுள்ளார் கமல்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்…
“எத்தனையெத்தனை இதயங்கள்…அத்தனையும் நான் உறையும் இல்லங்கள். என் பிறந்த நாளில் என்னை வாழ்த்திய கலைஞர்கள், தலைவர்கள், நண்பர்கள், மய்ய உறவுகள், என்னுடைய வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிய ரசிகப்பெருமக்கள் அனைவருக்கும் நன்றி நவில நாள் போதாது. என்றென்றும் என் நினைவில் இருப்பீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசனின் இந்த உருக்கமான டிவிட்டர் பதிவு, ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. இந்நிலையில் இன்று அல்லது நாளை முதல் இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷங்கர் இயக்கும் இந்தப் படம் இந்தியன் 2, இந்தியன் 3 என இரு பாகங்களாக ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.