பிக் பாஸ் 7 வீட்டில் இருக்கும் 14 போட்டியாளர்களுக்கு பயத்தை காட்டிவிட்டார்கள். பிக் பாஸ் 7 வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் மூன்று பேர் ஒயில்டு கார்டு மூலம் திரும்பி வருகிறார்கள்.
ஹவுஸ்மேட்ஸுக்கும், ஒயில்டு கார்டு போட்டியாளர்களுக்கும் டாஸ்க்குகள் கொடுக்கப்படும். அதில் ஹவுஸ்மேட்ஸ் தோல்வி அடைந்தால் 3 ஒயில்டு கார்டு வரவுகளுக்கு வழிவிட்டு பிக் பாஸ் 7 வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும்.
இந்நிலையில் தான் முதல் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு பந்தை பாஸ்கெட்டில் விழ வைப்பது தான் டாஸ்க். ரொம்ப வித்தியாசமான மற்றும் கடினமான டாஸ்காக இருக்கு பிக் பாஸ்.
விஷ்ணு விஜய், தினேஷ், சரவண விக்ரம், விஜே அர்ச்சனா உள்ளிட்டோர் டாஸ்க்கில் கலந்து கொண்டார்கள். சரவண விக்ரம் பந்தை பாஸ்கெட்டில் போட முடியாமல் கீழே விழ அய்யோ என்று பதறிவிட்டார்.
ஆனால் 3 பேரை வெளியேற்ற இப்படியொரு டாஸ்க் கொடுப்பார் பிக் பாஸ் என யாருமே எதிர்பார்க்கவில்லை. பிக் பாஸ் வீட்டில் பூகம்பம், பிக் பாஸ் வீட்டை உலுக்கும் பூகம்பம் என பிக் பாஸ் பயங்கரமாக பில்ட் அப் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
3 பேரை உள்ளே வரவழைத்து வீட்டில் இருக்கும் 3 பேரை விரட்டுவது நல்ல ஐடியாவாக தெரியவில்லை என பார்வையாளர்கள் தற்போதே புலம்பத் துவங்கிவிட்டார்கள்.
இதற்கிடையே பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்து ஒரேயொரு முறை தான் கூல் சுரேஷ் நாமினேட் ஆகியிருக்கிறார். அது எப்படி அவர் தொடர்ந்து எஸ்கேப் ஆகிறார். அவரை தொடர்ந்து காப்பாற்றி வருவது யார்?.
ஒரு வேளை பிக் பாஸ் நிகழ்ச்சியை கிழிச்சு தொங்கவிட்டதால் கடைசி வரை அவரை இருக்க வைத்து பழிக்கு பழி வாங்குகிறாரா பிக் பாஸ் என சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒயில்டு கார்டு மூலம் பிரதீப் ஆண்டனி வருவார் என எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அவர் பிக் பாஸுக்கு டாட்டா பை பை சொல்லிவிட்டு கோவாவுக்கு சென்றுவிட்டார். பிக் பாஸ் சேப்டர் ஓவர். நான் படம் இயக்கப் போகிறேன். அதற்கு ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணும் வேலை இருக்கு என கூறியிருக்கிறார் பிரதீப் ஆண்டனி.