இந்தியா
Trending

தமிழக காங்கிரஸில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை – ஈவிகேஎஸ் இளங்கோவன் பரபரப்பு பேட்டி

தமிழ்நாடு

தமிழக காங்கிரஸில் என்ன நடக்கிறதே என்று தெரியவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கட்சியில் என்ன கூட்டம் நடத்தினாலும் கே.எஸ். அழகிரி ரகசியமாகவே நடத்துகிறார் என்றும், மூத்த தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பதே கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் என்றாலே கோஷ்டி பூசல் என்று கூறும் அளவுக்கு பெயர் எடுத்திருக்கிறது அந்தக் கட்சி. மாநில வித்தியாசங்கள் ஏதுமின்றி, இந்தியா முழுவதுமே காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் என்பது மூடி மறைக்க முடியாத ஒன்றாக தான் இருக்கிறது.

அந்த வகையில், தமிழக காங்கிரஸில் மூடி மூடி மறைத்து வைத்திருந்த உட்கட்சி பூசல் இப்போது பீறிட்டு வெளிவந்திருக்கிறது. ஏற்கனவே கே.எஸ். அழகிரியை தலைவர் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று பல உள்ளடி வேலைகள் நடந்து வந்த நிலையில், அது தற்போது வெளிப்பட்டு இருக்கிறது. ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், வெளிப்படையாகவே கே.எஸ். அழகிரியை விமர்சித்திருக்கிறார்.

இடஒதுக்கீடு விவகாரத்தில் முன்னாள் பிரதமர் நேருவை பாமக நிறுவனர் ராமதாஸ் அவமரியாதையாக பேசியதாக, அவருககு கண்டனம் தெரிவித்து கே.எஸ். அழகிரி தலைமையிலான காங்கிரஸ் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுகுறித்து ஈவிகேஎஸ் இளங்கோவினிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்து அவர் பேசியாவது:

என்னை பொறுத்தவரை தமிழ்நாடு காங்கிரஸில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. கட்சியில் ஒரு கூட்டம் நடக்கிறது என்றால், எங்களை போன்றவர்களை எல்லாம் கூப்பிடுவது வழக்கம். இன்றைக்கு யாரையும் கூப்பிடாமல் ஒரு கூட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். என்ன மர்மமான கூட்டமோ என்னவோ எனக்கு தெரியவில்லை. அதில் என்ன பேசப்பட்டது என்றும் எனக்கு தெரியவில்லை. விசாரித்த பிறகு, அதுகுறித்து கருத்து தெரிவிக்கிறேன். முதலில் எங்களை எல்லாம் முன்னாள் தலைவர்கள் என்று சொன்னார்கள். பிறகு மூத்த தலைவர்கள் என்று சொன்னார்கள். இப்போது முடிந்து போன தலைவர்கள் என்று சொல்கிறார்கள். இவ்வாறு விகேஎஸ் இளங்கோவின கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button