எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்காகத் தயாரிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தில் நிதியொழுக்கம் காணப்படுகிறது.
அது நாட்டிற்கு மிகவும் அவசியம் என முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவரும் எம்.பி.யுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (21) இடம்பெற்ற வரவு -செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதி நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரச மற்றும் எதிர்க்கட்சியினரால் கருத்துக்கள் முன் வைக்கப்படுவது வழமையாகும்.
எனினும் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் நாம் தனிப்பட்ட நோக்கங்களுக்கு அப்பால் இம்முறை வரவு- செலவுத் திட்டத்தை பார்ப்பது அவசியமாகும்.
எமக்கு இரண்டு வழிகள் கிடையாது.நாம் எப்போதும் மக்களின் வழியிலேயே பயணிக்கின்றோம். அந்த வகையில் மக்களுக்கு பயனுள்ள வரவு -செலவு திட்டத்திற்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் குறைகள் இல்லாமலில்லை. அந்த வகையில் மக்களோடு இணைந்து நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது அவசியம்.
அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு நாம் எப்போதும் ஆதரவு வழங்குவோம் என தெரிவித்துள்ளார்.