உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது பிசியாக பல படங்களில் நடித்து வருகின்றார். இந்தியன் 2, தக் லைப் ஆகிய படங்களில் நடித்து வரும் கமல் கல்கி என்ற படத்தில் வில்லனாகவும் நடிக்கின்றார். இதைத்தவிர வினோத் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க தயாராகி வருகின்றார் கமல். இவ்வாறு பிசியாக நடித்து வரும் கமலை இயக்க பல இயக்குனர்கள் தற்போதும் முயற்சித்து வருகின்றனர்.
ஆனால் கமலே தன் படத்தை இயக்க அழைத்தும் அந்த வாய்ப்பை பிரபல இயக்குனர் ஒருவர் நிராகரித்துள்ளார்.அந்த தகவல் தான் தற்போது கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஒரு ஸ்டைலை உருவாக்கி இருப்பவர் தான் மிஸ்கின். சித்திரம் பேசுதடி, அஞ்சாதே என இவர் இயக்கிய படங்கள் உலகத்தரத்தில் இருக்கும்.
அந்த வகையில் மிஸ்கின் தனக்கு கமல் படத்தை இயக்க அழைப்பு வந்ததாகவும், ஆனால் அதை நிராகரித்ததாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகவும் கூறியுள்ளார் மிஸ்கின். அஞ்சாதே படத்தின் வெற்றிக்கு பிறகு மிஷ்கினை கமல் அழைத்து பாராட்டினார். அதன் பிறகு மிஷ்கினிடம் கதை கேட்டுள்ளார் கமல். மிஷ்கினும் ஒரு கதையை கூறினார். இருவரும் சில காலம் படம் பண்ணுவதாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் கதையில் சில உடன்பாடு ஏற்படாததால் மிஸ்கின் விலகுவதாக கூறியுள்ளார்.
கமல் வேறேதாவது கதையை பண்ணலாம் என கூறியும் மிஸ்கின் அதனை ஏற்கவில்லையாம். இதனால் இந்த கூட்டணி நடைபெறாமல் போனது.
இந்நிலையில் எதிர்காலத்தில் மிஸ்கின் கமலை இயக்கினால் நன்றாக இருக்கும் என்ற தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர் ரசிகர்கள்.