காசா போரில் உயிரிழந்த கனடியப் பிரஜைகளின் எண்ணிக்கை எட்டாக உயர்வடைந்துள்ளது.
கனடிய வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் தரப்புக்களுக்கு இடையிலான போர் கடந்த ஒக்ரோபர் மாதம் 7ம் திகதி ஆரம்பமானது.
இந்தப் போரின் எதிரொலியாக லெபனானில் வைத்து மற்றுமொரு கனடியர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், குறித்த கனடியர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்த வார இறுதியில் ராஃபா எல்லைப் பகுதி திறந்து விடப்பட்டதன் பின்னர் 130 கனடியர்கள் காசாவிலிருந்து எகிப்தை சென்றடைந்துள்ளனர்.