இஸ்ரேலிய பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு இலக்கானமை குறித்து கனடா கண்டனம் வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் போராளிகள், இஸ்ரேலிய பெண்கள் மீது மேற்கொண்ட பாலியல் பாலியல் குற்றச் செயல்களை கண்டித்துள்ளது.
கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனா ஜோலி ஹமாஸ் இயக்கத்தை கண்டித்துள்ளார்.
போரில் இழைக்கபப்டும் பாலியல் வன்கொடுமைகள் போர்க் குற்றச் செயல்களாக வகையீடு செய்யப்பட வேண்டுமென என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாலியல் மற்றும் பால்நிலை தொடர்பிலான சகல வன்முறைகளையும் கண்டிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் போராளிகள் மேற்கொண்ட பாலியல் வன்கொடுமைகளை கண்டிக்குமாறு எதிர்க்கட்சிகள் பிரயோகித்த அழுத்தங்கள் காரணமாக அரசாங்கம் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும், இந்த சம்பவம் இடம்பெற்ற போது கனடா கண்டனத்தை வெளியிடவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.