மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஒரு நீதிபதியின் தலைமையில் தணிக்கை செய்ய வேண்டும் – அண்ணாமலை…!!
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஒரு நீதிபதியின் தலைமையில் தணிக்கை செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நபாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது…
அமைச்சர் கே.என்.நேரு கடந்த 2, 3 மாதங்களுக்கு முன்னர் 98 சதவிகித மழைநீர் வடிகால் பணிகள் முடிந்து விட்டதாக கூறினார். ஆனால் தற்போது 42 சதவிகித பணிகள் மட்டுமே முடிந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே ஒரு நீதிபதியின் தலைமையில் மழைநீர் வடிகால் பணிகள் செய்தார்களா இல்லையா என்பதை தணிக்கை செய்தாலே அனைத்து உண்மைகளும் தெரிந்துவிடும்.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையை அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும். டோக்கன் கொடுப்பது கால தாமதத்தை ஏற்படுத்தும். மழை பெய்து 7 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பாதிப்புகள் குறையவில்லை. திமுக அரசு அறிவித்துள்ள நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். அதேபோல் சேதமடைந்த பகுதிகளையும் கண்டறிந்து சரி செய்ய வேண்டும். இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.