விசிகவுக்கு வந்த வித்தியாசமான பிரச்சனை; எச்சரித்த திருமாவளவன் – நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவு…!
தமிழ்நாடு
விடுதலை சிறுத்தைகள் கட்சியை குறிவைத்து கடந்த சில வாரங்களாக அரசியல் செய்து வருகின்றன எதிர்க்கட்சிகள். அண்மையில் சீரியல் நடிகை அகிலா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோரை குறித்து மோசமான அவதுறான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. திருமாவளவன் மீது தனிப்பட்ட முறையில் மோசமான விமர்சனங்களை வைத்தார்கள். இது பெரும் சர்ச்சையான நிலையில், நடிகை அகிலா விளக்கம் அளித்தார்.
இந்த பிரச்சனை ஓய்த பின்னர், அப்படியே விசிக திமுக கூட்டணிக்கு எதிராகவும் சிலர் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள். திமுக கூட்டணியில் இருக்க திருமாவளவன் விரும்பவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. அண்மையில் திருமாவளவன், சென்னை மிக்ஜாம் புயல் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என எதிர்க்கட்சிகளை போல் வலியுறுத்தினார். இது திமுக விசிக கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும் என்று கருத்துக்கள் வேகமாக பரவி வருகின்றன. இது ஒருபுறம் எனில் விசிகவின் உட்கட்சி விவகாரங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது மேலும் விமர்சனங்களை உருவாக்கி வருகிறது.
இந்த சூழலில் உட்கட்சி விவகாரங்களை சமூக வலைதளங்களில் எழுதக் கூடாது என விசிக நிர்வாகிகளை திருமாவளவன் எச்சரித்துள்ளார்.
வரும் டிசம்பர் 29ம் திகதி திருச்சி சிறுகனூரில் விசிக சார்பில் வெல்லும் ஜனநாயகம் என்னும் மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விசிகவினர் செய்து வருகின்றனர்.
மாநாடு தொடர்பாக கட்சி நிர்வாகிகளை செனை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்தார். இந்த கூட்டத்தில், மாநாடு நடைபெறும் திடல் வடிவமைப்பை கொண்டு நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து திருமாவளவன் விவாதித்தாராம். உட்கட்சி விவகாரங்களை சமூக வலைதளங்களில் எழுதக் கூடாது என்றும் எச்சரித்தாராம். இது இறுதி எச்சரிக்கை என்று நிர்வாகிகளிடம் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.