குண்டக்க மண்டக்க கூட்டணி மீண்டும் இணைகிறதா? – பார்த்திபன் என்ன கூறியிருக்கிறார் பாருங்க…!!
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 15 படங்களை இயக்கி 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் பார்த்திபன். இவர் இயக்குனர் பாக்கியராஜிடம் துணை இயக்குனராக பணியாற்றி அதன்பிறகு சொந்தமாக படங்களை இயக்க தொடங்கினார். இயக்குனர் சேரனின் பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக பிரபலமான நடிகராக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் பார்த்திபன்.
அதன்பிறகு எண்ணற்ற படங்களை இயக்கி எண்ணற்ற படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நடிகர் மற்றும் இயக்குனராக இருக்கிறார். வைகைப்புயல் வடிவேலு ஆரம்பகாலகட்டத்தில் சிறு சிறுகதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கியிருக்கிறார். தொடர்ந்து எண்ணற்ற படங்களில் குணசத்திர கதாபாத்திரம் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் வடிவேலு.
தமிழ் திரைப்பாட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சென்ற ஜனவரி 6ஆம் திகதி கலைஞரின் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் எண்ணற்ற நட்சத்திரங்களும் பொதுமக்களும் திமுக கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள். அந்த வகையில் இந்த நிகழ்வில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் வடிவேலுவை சந்தித்து அவருடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தை அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும் என்பது குறித்து பேசினோம் விரைவில் வந்தாலும் எப்போது வந்தாலும் பார்த்துவிடலாம் என பதிவிட்டிருக்கிறார்.
அந்த வகையில் பார்த்திபன் மற்றும் வடிவேலுவின் கூட்டணி கூடிய விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம். பார்த்திபன் மற்றும் வடிவேலுவின் கூட்டணி முதல் முறையாக இயக்குனர் சேரனின் பாரதி கண்ணம்மா படத்தில் இணைந்தது. இவர்களது குண்டக்க மண்டக்க காமெடி தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அதன் பிறகு மீண்டும் வெற்றிப் படிக்கட்டு, காக்கை சிறகினிலே, காதல் கிறுக்கன் போன்ற படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள்.
பார்த்திபன் மற்றும் வடிவேலுவின் கூட்டணி மக்களின் ஆல் டைம் ஃபேவரைட் கூட்டணியாக அமைந்தது. தற்போது பார்த்திபன் பதிவிட்டு இருக்கும் இந்த பதிவு பார்த்திபன் மற்றும் வடிவேலுவின் முந்தைய கூட்டணியை உறுதிப்படுத்துவதாக இருக்குமோ என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.