வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள சுமார் 3 மில்லியன் இலங்கையர்களில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில், 1.2 வீதமானோரே பதிவு செய்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் பதிவுசெய்யாது சட்டவிரோதமாக வெளிநாடு சென்றவர்களே, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளின் போது, பல்வேறு பாதிப்புகளுக்கு முகங்கொடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தம்மைப் பதிவுசெய்து வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு காப்புறுதி பாதுகாப்பு கிடைப்பதுடன், பெரும்பாலான பிரதிபலன்களும் உரித்தாகுகின்றன.
சில தரப்பினர் நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்படாது தவறான முறைமையின் மூலம் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.
இதனால், அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதில் அமைச்சு பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க நேர்கிறது.
எவ்வாறாயினும் இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்குச் சென்று அங்கு பாதிப்புகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டால், அவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சு கவனம் செலுத்தும்.
மூன்று மில்லியன் மக்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்கள் எதிர்நோக்க நேரும் பாதிப்புகள் சம்பந்தமாக ஆயிரத்திற்கும் குறைவான முறைப்பாடுகளே கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.