இந்தியா: தமிழ்நாடு
விரைவில் இந்திய நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வருகை தர உள்ளார். பிரமதர் மோடி ஜனவரி 19ம் திகதி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இதில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டிகள் வரும் 19ம் திகதி தொடங்க உள்ளது. சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டியை தொடங்கி வைக்க, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 4ம் திகதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார்.
எனவே இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளார். ஜனவரி 19ல் சென்னையில் போட்டியை தொடங்கி வைக்க உள்ள பிரதமர் மோடி அதன்பிறகு ஜனவரி 20ம் திகதி சென்னையில் இருந்து திருச்சி சென்று ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார். அதன்பிறகு அங்கிருந்து மதுரை செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார்.