இலங்கை
Trending

இலங்கையில் வரலாறு காணாத அளவில் அதிகரித்த மாம்பழ உற்பத்தி..!!

இலங்கையில் மாம்பழ அறுவடை இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டில் நீடித்த வறண்ட வானிலையும், அதைத் தொடர்ந்து பெய்த மழையும் மாம்பழ அறுவடையை அதிகரிக்கச் செய்ததாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் ரூ.800 முதல்1000 வரை விலை போன 1 கிலோகிராம் TEJC மாம்பழம் தற்போது ரூ. 400 முதல் 500 ரூபாய் வரை குறைந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மாம்பழங்கள் பயிரிடப்படுவதாக திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஏற்றுமதிக்காக பயிரிடப்படும் TEJC எனும் மாம்பழம் விலை குறைவினால் உற்பத்தி தடைப்படலாம் என எச்சரிக்கப்பட்டது.

அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பக்கழக தரவுகளின்படி, இலங்கையில் விளையும் அனைத்து வகையான மாம்பழங்களின் வருடாந்த அறுவடையும் சுமார் 250 மில்லியன் பழங்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 2023-24 மாம்பழ பருவம் அந்த அளவைத் தாண்டியுள்ளதாக தற்போதைய தரவு உறுதிப்படுத்தியுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ரூ.800 முதல்1000 வரை விலை போன 1 கிலோகிராம் TEJC மாம்பழம் தற்போது ரூ. 400 முதல் 500 ரூபாய் வரை குறைந்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button