இந்தியா
Trending

முதலமைச்சர் பதவி மேல் ஆசை இல்லை – அண்ணாமலை…!!

இந்தியா: தமிழ்நாடு

பாஜகவில் கட்சியில் பல தலைவர்கள் உள்ளார்கள் எனவும், தனக்கு முதலமைச்சர் ஆசை இல்லை எனவும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

திமுக சட்டமன்ற உறுப்பினர் பல்லாவரம் கருணாநிதி மகன் மீது அவர் வீட்டில் வேலை செய்த பெண் புகார் தெரிவித்துள்ளார். சமூக நீதி பேசும் திமுகவினர் செய்கின்ற செயல் தான் இது. பிரதமர் எந்த அளவிற்கு தமிழ்நாடு மக்கள் மீது அன்பு வைத்துள்ளார்கள் என்பது அவர் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வருவதிலே தெரிகிறது. பிரதமர் அயோத்திக்கு செல்வதற்கு முன்பு ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு செல்கிறார். ராமரை பொருத்தவரை அனைவருக்கும் அவர் சமமானவர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளார்கள். ஆனால் தமிழ்நாட்டிற்கு விடுமுறை அளிப்பார்களோ, இல்லையோ ஆனால் மக்கள் மனப்பூர்வமாக கொண்டாடுவார்கள். திமுக பரிசு கொடுப்பது இராமயணம் புத்தகம். ஆனால் ஒரு பக்கம் கோயிலை இடிப்பார்கள். ராமர் கோயிலை பற்றி பேசுவதற்கு முன் உதயநிதி முதலில் வரலாற்றை தெரிந்து கொள்ளட்டும்.

ஆளுநர் தமிழ்நாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். ஆளுநர் வரம்பு மீறியதாக உச்சநீதிமன்ற சொல்லவில்லை. முதலில் ஆளுநர் மீது முதலமைச்சர் குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு, கண்ணாடியை பார்த்து ஆட்சி எப்படி நடத்துவது என்பதை தெரிந்து கொள்ளட்டும். 2ஜி வழக்கு விசாரணை அப்போது உள்ள ஆட்சியில் கண்துடைப்புக்காக நடத்தப்பட்டது. எனக்கு முதலமைச்சர் ஆசை இல்லை. எங்களது கட்சியில் பல தலைவர்கள் உள்ளார்கள்.

ஆனால் என்னை பற்றி சொல்லும் கட்சிக்காரர்கள், அவர்கள் கட்சியில் அடுத்த தலைவர்களை அடையாளம் காட்ட முடியுமா. அவர்களை பொறுத்தவரையில் ஒரே தலைவரை மட்டுமே சுற்றி சுற்றி அடையாளம் காட்ட முடியும். அவர்களை பொறுத்தவரையில் ஒருவரை தூக்கி பிடித்து இவர் தான் என நாங்கள் சொல்லமாட்டோம். என்னை பொறுத்தவரை பல தலைவர்களை உருவாக்குவது.

பதவி ஆசை பிடித்த சில கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். என்னைவிட திறமையான முதலமைச்சர்கள் பதவிக்கு தகுதியான பல தலைவர்கள் பாஜகவில் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button