BAFTA விருது பெற்ற இயக்குநர் பிலிப் ஜானின் சென்னை ஸ்டோரி சர்வதேச படத்தில் சமந்தா ஹீரோயினாக நடிப்பார் என தெரிவிக்கப்பட்டது. பிலிப் இயக்கத்தில் நடிப்பதை நினைத்து சந்தோஷப்பட்டார் சமந்தா. இந்நிலையில் சமந்தாவுக்கு பதில் ஸ்ருதி ஹாசனை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
சென்னை ஸ்டோரி படத்தில் தனியார் டிடெக்டிவாக நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன். ஆங்கிலத்தில் உருவாகும் அந்த படத்தில் நடிப்பது ஸ்ருதிக்கு ஒன்றும் பெரிய விஷயமாக இருக்காது. சென்னை ஸ்டோரி படத்தில் நடிப்பது குறித்து ஸ்ருதி ஹாசன் கூறியதாவது,
நான் சென்னை பொண்ணு. அப்படி இருக்கும்போது சென்னையின் தனித்துவத்தை காட்டும் படத்தில் நடிப்பது எனக்கு ரொம்ப ஸ்பெஷலானது. பிலிப் ஜான் இயக்கத்தில் நடிப்பதை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது என்றார்.
அந்த படத்தில் இங்கிலாந்தை சேர்ந்த விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ, அவதார் பட ஹீரோ சாம் வொர்திங்டன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
படம் குறித்து இயக்குநர் பிலிப் ஜான் கூறியதாவது, திறமையான நடிகையான ஸ்ருதி ஹாசனுடன் சேர்ந்து வேலை செய்யப் போவதில் மகிழ்ச்சி. சென்னை மற்றும் கார்டிஃபை மையமாக வைத்து உருவாக்கப்படும் எமோஷனல் ரோலர் கோஸ்டர் படத்தில் ஸ்ருதி நடிக்கிறார் என்றார்.
திமேரி என் முராரி எழுதிய The Arrangements of Love புத்தகத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுகிறது சென்னை ஸ்டோரி. தற்போது ப்ரீ ப்ரொடக்ஷன் வேலை நடந்து வருகிறது. சென்னை மற்றும் கார்டிஃபில் படப்பிடிப்பு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய்க்கு மேல் சிகிச்சை பெற வசதியாக கெரியரில் இருந்து பிரேக் எடுத்திருக்கிறார் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.