ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கான நிதி எங்கிருந்து கிடைக்கின்றது - வேட்பாளர்கள் வெளியிடவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள்
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கான நிதி எங்கிருந்து கிடைக்கின்றது - வேட்பாளர்கள் வெளியிடவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள்
தேர்தல் பிரச்சாரத்திற்கான நிதி எப்படி கிடைக்கின்றது என்பது உள்ளிட்ட விபரங்களை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் வெளியிடவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
செப்டம்பர் 21 ம் திகதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவுசெய்யக்கூடிய பணத்தின் வரம்பினை தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு வேட்பாளரும் தங்களின் பிரச்சாரத்திற்காக எவ்வளவு செலவிடலாம் என்பதை தீர்மானி;ப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வேட்பாளர்களை தீர்மானிக்கவுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானிப்பதை வேட்பாளர்கள் பின்பற்றவேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகி வெற்றிபெற்றவர் அறிவிக்கப்பட்டதும்,தாங்கள் செலவிட்ட பணம் குறித்த விபரங்களை வெளியிடுவதற்கு அனைத்து வேட்பாளர்களிற்கும் 21 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களின் அறிக்கையை ஆராய்ந்து பத்து நாட்களின் பின்னர் இணையத்தில் அது குறித்த விபரங்கள் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்ததற்கு அதிகமாக வேட்பாளர் எவராவது செலவுசெய்திருந்தால் அவருக்கு எதிராக பொதுமக்கள் நீதிமன்றம் செல்லலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.