Shanu
Matale
இந்த நாட்டில் தங்களது முதல் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு முன்பே இவ்வுலகை விட்டு பிரியும் இதய நோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு உயிர் கொடுக்கும் நோக்கத்துடன் Little Hearts திட்டம் 2016 இல் தொடங்கியது
இதய நோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை வழங்குவதற்காக, குழந்தை மருத்துவர்கள் நிறுவனம், தெரண ஊடக வலையமைப்புடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட Little Hearts திட்டத்தின் பெயரை தவறாகப் பயன்படுத்தி பொது மக்களிடமிருந்து பணம் பறிக்கும் மோசடி பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளது
அப்போதிருந்து, Little Hearts திட்டம், பொது மக்களின் நன்கொடைகளை மிகவும் வெளிப்படையான முறையில் பயன்படுத்தி, இந்த நாட்டில் இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதோடு, பொதுமக்களின் நம்பிக்கைக்குரிய வகையிலும் செயற்பட்டு வருகிறது.
இருப்பினும், இதுபோன்ற ஒரு சூழலில், Little Hearts திட்டத்தின் பெயரைப் பயன்படுத்தி, போலி வங்கி கணக்கு இலக்கங்கள் ஊடாக பொது மக்களிடமிருந்து பணம் பெறும் ஒரு மோசடித் திட்டம் குறித்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்த மோசடியாளர்கள், பொதுமக்களை தவறாக வழிநடத்த உண்மையான சின்னதை போன்ற ஒரு போலி சின்னத்தை பயன்படுத்தியுள்ளனர்.
இரண்டு சின்னங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை உடனடியாகப் புரிந்துகொள்ள முடியாததால், ஏராளமான மக்கள் ஏற்கனவே மோசடியாளர்களின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
இந்த போலியான Little Hearts சின்னத்தைப் பயன்படுத்தி, சமூக ஊடகங்களில் பல்வேறு திட்டங்களை மோசடியாளர்கள் விளம்பரப்படுத்தியுள்ளதுடன், இந்த திட்டங்களிலிருந்து திரட்டப்படும் பணம் Little Hearts திட்டத்தின் மூலம் சமூக நலனுக்காகப் பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர்.
Little Hearts என்ற பெயரால் மக்கள் எந்த தயக்கமும் இல்லாமல், மறு யோசனையும் இல்லாமல் அந்த திட்டங்களுக்கு பணம் கொடுத்துள்ளனர்.
பணம் வரவு வைக்கப்பட்ட பிறகு, மோசடியாளர்கள் வழங்கிய தொலைபேசி எண்களும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், இன்றுவரை அந்த தொலைபேசி எண்கள் மூலம் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
மோசடியாளர்கள் பணத்தை வைப்பிலிடுவதற்காக வழங்கிய கணக்கு எண்களைச் சரிபார்த்த போது, அந்த கணக்கு எண்கள் Little Hearts திட்டத்துடன் தொடர்புடையவை அல்ல என்பதை அத தெரண உகுஸ்ஸா உறுதிப்படுத்தியது.
இந்த மோசடியாளர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர், நீங்கள் அவர்களின் அடுத்த இலக்காக இருக்கலாம்.
எனவே, Little Hearts திட்டத்திற்கான நிதியை பின்வரும் கணக்கு எண்களுக்கு மட்டுமே வரவு வைக்க முடியும் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறது.
இலங்கை வங்கி – 797 386 33
சம்பத் வங்கி – 0029 3002 612 / 5004 1000 802