
Shanu
நுகேகொடை தெல்கந்த பிரதேசத்தில் ஒரு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபானம் ஒரு தொகுதியை ஊழல் தடுப்பு விசாரணை செயலணி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இது, மறைத்து வைக்கப்பட்டிருந்த வர்த்தக நிலையத்தின் முகாமையாளரான 59 வயது நபரும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.நுகேகொடை தெல்கந்த பிரதேசத்தில் பிரபல வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் நிறுவனத்திலிருந்தே மேற்படி இந்த வெளிநாட்டு மதுபானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நிறுவனத்தின் கீழ் மாடியில், மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பகுதியில் மிகச் சூட்சுமமான வகையில் இந்த மதுபானம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொள்ளுப்பிட்டி மற்றும் கொட்டாவை பகுதிகளில் இயங்கும் இரவு நேர களியாட்ட விடுதிகளின் உரிமையாளர் ஒருவர், அந்த களியாட்ட விடுதிகளுக்கு விநியோகிப்பதற்காகவே மதுபானத்தை வைத்திருந்ததாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நபர் மோட்டார் வாகன உதிரிப்பாக வர்த்தக நிலையத்தில் மறைத்து வைத்து, பின்னர் களியாட்ட விடுதிகளுக்கு இம்மதுபானத்தை விநியோகித்து வந்துள்ளார்.