
Shanu
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.இன்று (17) காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
இதன்போது, 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.இதன்படி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டத்தை (2025) ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அநுர குமார திசாநாயக்க இன்று (17) முற்பகல் 10.30 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து வரவு செலவுத்திட்ட விவாதம் நாளை (18) முதல் மார்ச் (21) வரை 26 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. அரசாங்கத்தின் இந்த முதலாவது வரவு செலவுத் திட்டம் நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது