
Shanu
பௌத்தர்களின் புனிதத் தலமான தலதா மாளிகை மீது புலிகள் தாக்குதல் நடத்தியிருந்தால், அதற்காக தமிழ் மக்கள் சார்பில் மன்னிப்புக் கோருவதாக இராமநாதன் அர்ச்சுனா எம்.பி. பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி கபீர் ஹாசிம், பௌத்தர்களின் புனிதத் தலமான தலதா மாளிகை மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் ஜே.வி.பி. மன்னிப்பு கோரியதா? யாழ். நூலகம் தொடர்பில் கதைக்கும் ஜே.வி.பி. தலதா மாளிகை மீதான தாக்குதலுக்காக சுய விமர்சனம் செய்யாதது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.
இதன்போது இடை நடுவில் குறுக்கிட்ட அர்ச்சுனா எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய கபீர் ஹாசிம் எம். பி இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வரவு செலவுத் திட்ட உரையின் போது, யாழ். நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தெரிவித்திருந்தார். நூலகத்தை தீ வைப்பதற்கு அரசியல் கட்சியொன்று உதவியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் எமது தாய், கட்சியின் பெயர் அதனுடன் தொடர்புபடுத்தப்பட்டது.ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இருவர் அங்கிருந்தமையால் அந்தக் கட்சி மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பில் நாம் கவலையடைகிறோம். ரணில் விக்கிரமசிங்க சில வருடங்களுக்கு முன்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற வகையில் இதற்காக மன்னிப்புக் கோரினார்.ஆனால், அன்று தலதா மாளிகை மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் ஜே.வி.பி மன்னிப்பு கோரியதா?
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இருவர் அங்கிருந்தமையால் அந்தக் கட்சி மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பில் நாம் கவலையடைகிறோம். ரணில் விக்கிரமசிங்க சில வருடங்களுக்கு முன்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற வகையில் இதற்காக மன்னிப்புக் கோரினார்.ஆனால், அன்று தலதா மாளிகை மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் ஜே.வி.பி மன்னிப்பு கோரியதா?யாழ். நூலகம் தொடர்பில் கதைக்கும் ஜே. வி.பி யினர் தலதா மாளிகை மீதான தாக்குதலுக்காக சுய விமர்சனம் செய்தார்களா? அதனால் அவர்கள் மற்றவர்கள் தொடர்பில் கதைக்க உரிமையற்றவர்கள். 1974ஆம் ஆண்டுக்கான சாபத்திற்கு அவர்களே பொறுப்பாளர்கள் என்றும் அவர் ஜே.வி.பியினரை விமர்சித்து பல கருத்துக்களை முன் வைத்தார்.இதன் போது ஒழுங்குப் பிரச்சினை யொன்றை முன்வைத்து குறிப்பிட்ட அர்ச்சுனா எம்.பி,யாழ். நூலகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை தொடர்பில் அரசாங்கத்திற்கு நான் நன்றி கூறுகின்றேன். அதேவேளை,தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதலுக்கு நாங்கள் மன்னிப்பு கோரவில்லை என்று கபீர் ஹாசிம் எம் பி கேள்வி எழுப்பினார். அப்போது எனக்கு ஏழு வயது.புலிகள் எங்களை பிரதிநிதித்துவப்படுத்துவர்களாக இருந்தால், அந்த பிழையை அவர்கள் செய்திருந்தால் அதற்காக நாங்கள் மன்னிப்பு கோருகின்றோம்.
1983ஆம் ஆண்டில் இருந்து திட்டமிட்ட பாரபட்சத்தை எதிர்நோக்கியதால் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏற்பட்டது.