இந்தியாவிளையாட்டு
IPL 2025: கட்டுப்பாடுகளை மீறினால் அபராதம்

Shanu
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் ஐபிஎல் தொடர், வரும் மார்ச் 22 முதல் மே 25 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகளுக்கான புதிய விதிமுறைகள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த அறிவிப்பில், வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் தொடரில் இந்திய அணியின் செயல்பாடுகளைத் தொடர்ந்து இந்திய வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.
அந்த விதிமுறைகளின்படி, அணி பேருந்தில் தனிப்பட்ட மேலாளர்கள் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், சுற்றுப்பயணங்களின் போது வீரர்களின் குடும்பத்தினருக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.