மீண்டும் வெடித்து சிதறியது எலன் மஸ்கிட்க்கு சொந்தமான விண்கலம்

Shanu
விண்ணுக்கு ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப்பில் விண்கலத்தில் இருந்து வெளியான குப்பைகளால் புளோரிடாவின் சில விமான நிலையங்களில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.
அத்திலாந்தின் பெருங்கடலில் இருந்து ஏவப்பட்ட விண்கலம் வெடித்து சிதறியமையினால் ஒர்லாண்டோ மற்றும் மியாமி ஆகிய விமான நிலையங்களில் அனைத்து விமானங்களும் தரையிறங்குமாறு அறிவிக்கப்பட்டது.
பின்னர் அந்த அறிவித்தல் திரும்பப் பெறப்பட்டது
ஸ்டார்ஷிப் விண்கலம் பறக்கத் தொடங்கிய 8.5 நிமிடங்களில் கட்டுப்பாட்டு மையத்துடன் உள்ள தொடர்பை இழந்ததாகவும், ஸ்டார்ஷிப் விண்கலம் நொறுங்கிவிட்டதாகவும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உறுதி செய்தது.கோடீஸ்வரர் எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ்,”முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தற்செயல் நடவடிக்கைகளுக்காக” பாதுகாப்பு அதிகாரிகளுடன் குழுக்கள் உடனடியாக ஒருங்கிணைந்துள்ளனர்.
விபத்தின் “மூல காரணத்தை நன்கு புரிந்துகொள்ள” ஸ்பேஸ்எக்ஸ் தரவை மதிப்பாய்வு செய்யும் “எப்போதும் போல, வெற்றி என்பது நாம் கற்றுக்கொள்வதிலிருந்து வருகிறது, மேலும் இன்றைய விமானம் ஸ்டார்ஷிப்பின் நம்பகத்தன்மையை மேம்படுத்த அதிக பாடங்களை கற்றுக்கொடுக்கும் .” என தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து மஸ்க் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.