சினிமா

விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தில் மொத்தம் இத்தனை பாடல்களா ?

Shanu

விஜய் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். KVN புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார்.

மேலும் பூஜா ஹெக்டே, கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், பாபி தியோல், ப்ரியாமணி என பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

விஜய்யின் கடைசி படம் இது என்பதால் வழக்கமான தளபதி படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்புகளை விட இப்படத்திற்கு அதிகமான ஹைப் இருந்து வருகின்றது.

மேலும் இப்படத்தின் மூலம் முதல் முறையாக இயக்குனர் ஹெச்.வினோத்துடன் கூட்டணி அமைக்கிறார் விஜய். இதுவும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகளுக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது எனலாம். அஜித்தை வைத்து மூன்று படங்களை இயக்கி அஜித்தின் ஆஸ்தான இயக்குனராக மாறிவிட்ட வினோத் விஜய்யின் கடைசி படத்தை இயக்குகிறார்.

எனவே இவர்கள் கூட்டணியில் உருவாகும் ஜனநாயகன் திரைப்படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் இருந்து வருகின்றது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகின்றதாம். விஜய் ஒருபக்கம் அரசியல் ஒருபக்கம் நடிப்பு என செம பிசியாக இருந்து வருகின்றார்.

எனவே விஜய் மாதம் 15 நாட்கள் அரசியலுக்கு 15 நாட்கள் படத்திற்கு என ஒதுக்கியுள்ளதாக தகவல் வருகின்றன. அதன் காரணமாக தான் மார்ச் மாதத்திற்குள் முடியவேண்டிய இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் வரை செல்ல இருப்பதாக கூட தகவல் வந்துள்ளன. ஆனால் இந்த தகவல் உண்மையா ? இல்லையா ? என தெரியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தை பற்றி ஒரு தகவல் கிடைத்திருக்கின்றது. அதாவது விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படத்தில் மொத்தம் ஐந்து பாடல் காட்சிகள் உள்ளதாம்.

அனிருத் இசையில் உருவாகும் இப்படத்தில் ஐந்து பாடல் காட்சி இருப்பது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. முன்பெல்லாம் ஒரு படத்தில் குறைந்தது நான்கு அல்லது ஐந்து பாடல்கள் இருக்கும். ஆனால் தற்போதைய ட்ரெண்டில் ஒரு படத்தில் அதிகபட்சம் இரண்டு பாடல்கள் இருந்தாலே ஆச்சர்யம் தான்.

ஒரு சில பெரிய ஹீரோக்களின் படங்களை தவிர பெரும்பாலான படங்களில் பாடல்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் குறைந்துவிட்டது. இந்த சமயத்தில் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தில் ஐந்து பாடல்கள் இருப்பதாக வந்த தகவல் கோலிவுட் ரசிகர்களை குஷிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button