காசாவின் தற்போதைய நிலைமைகள் குறித்து கனடிய அரசாங்கம் தனது கவலையை வெளியிட்டுள்ளது.
பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அண்மையில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை பொது வெளியில் விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில், காசாவின் மனிதாபிமான நிலைமைகள் பெரும் கவலை அளிப்பதாக கனடிய பிரதி பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் தெரிவித்துள்ளார்.
காசா பிராந்தியத்திலிருந்து கிடைக்கப்பெறும் புகைப்படங்கள் வேதனை அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காசாவின் மனிதாபிமான நிலைமைகள் மோசமடைந்துள்ளது என்பது பலராலும் எற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்hளர்.
இதேவேளை, இஸ்ரேலிய பிரதமர் கனடிய பிரதமரின் கருத்துக்கு தனது எதிர்ப்பை டுவிட்டரின் ஊடாக வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.