கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான முரண்பாட்டு நிலை உக்கிரமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவுடனான வர்த்தக உறவுகள் குறித்து பேச்சு வார்த்தைகள் நடத்தப்படாது என கனடா தெரிவித்துள்ளது.
இருநாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர முறுகல் நிலை நீடித்து வருகின்றது
அண்மையில் கனடாவில் படுகொலை செய்யப்பட்ட சீக்கிய ஆன்மீகத் தலைவர் ஹார்தீப் சிங் நிஜார் தொடர்பிலான விசாரணைகளுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
கனடிய வர்த்தக விவகார அமைச்சர் மேரி நக் இந்த இந்த நிபந்தனையை விதித்துள்ளார்.
நிஜார் கொலை குறித்த விசாரணைகளுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் வரையில் வர்த்தக பேச்சு வார்த்தைகளுக்கு இடமில்லை என அவர் தெரிவித்துள்ளார் அமெரிக்காவில் ஊடகவியலாளர்களிடம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நிஜாரின் படுகொலையின் பின்னணியில் இந்திய முகவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பகிரங்க குற்றச்சாட்டு சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.