இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.
படத்துக்கு தலைவர் 171 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கமல் ஹாசனுக்கு எப்படி விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றியை லோகேஷ் கொடுத்தாரோ அதேபோல் ரஜினிக்கும் மெகா ப்ளாக் பஸ்டரை கொடுப்பார் என்று ரஜினியின் ரசிகர்கள் ஆவலில் இருக்கின்றனர்.
இந்நிலையில் தலைவர் 171 படத்துக்காக லோகேஷ் கனகராஜுக்கு சன் பிக்சர்ஸ் ஒரு வசதி செய்துகொடுத்திருப்பதாக தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.
அதாவது லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 படத்துக்கு கதை எழுதுவதற்காக பெசண்ட் நகர் பீச்சில் ரூம் ஒன்றை போட்டுக் கொடுத்திருக்கிறதாம் சன் பிக்சர்ஸ். அந்த ரூமின் வாடகை கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய் என்று திரைத்துறையில் பேசப்பட்டுவருகிறது.