சிங்கப்பூர் – இலங்கை இடையில் தற்போதுள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்த சிங்கப்பூர் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் லீ சியென் லொங்க் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒகஸ்ட் மாதம் சிங்கப்பூருக்கு ஜனாதிபதி ரணில் விஜயம் செய்த போது, இருதரப்பு கலந்துரையாடல்களைப் பாராட்டி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள விசேட கடிதத்திலேயே சிங்கப்பூர் பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையே ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களின் அனுகூலமான முடிவுகளுக்கு தனது மனமார்ந்த நன்றியை பிரதமர் லீ சியென் லொங்க் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கான தனது அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில், இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை விரைவில் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணலின் சிறந்த ஆரோக்கியத்திற்காகவும் இலங்கையை முன்னேற்றப் பாதைக்கு வழிநடத்தும் வேலைத்திட்டத்திற்காகவும் சிங்கப்பூர் பிரதமர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.