முன்னணி இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் த்ரிஷா இல்லனா நயன் தாரா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜிவி பிரகாஷ் தொடர்ந்து பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, நாச்சியார் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
அவர் நடித்த படங்களிலேயே முக்கியமான படங்களாக அமைந்தது, ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவான சர்வம் தாளமயம், சசி இயக்கத்தில் உருவான சிவப்பு மஞ்சள் பச்சை, பாலா இயக்கத்தில் உருவான நாச்சியார் ஆகிய படஙக்ள். இந்த மூன்று படங்களிலும் அவரது நடிப்பு நன்றாகவே மெருகேறியிருந்தது.
இந்நிலையில் அவரது நடிப்பில் கடைசியாக அடியே படம் வெளியானது. படத்துக்கு சுமாரான வரவேற்பே கிடைத்தது. இருந்தாலும் ஜிவியின் நடிப்பு சொல்லிக்கொள்ளும்படி இருந்தது.
இந்த சூழலில் அவரது அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது தமிழில் முக்கியமான இயக்குநராக இருக்கும் ராம் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கவிருக்கிறார் என்றும் அதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே சீனு ராமசாமி இயக்கத்தில் இடிமுழக்கம் என்ற படத்திலும் அவர் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அனுராக் காஷ்யப் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.