
Shanu
மும்மொழிக் கல்வி கொள்கையை திணிப்பது ஃபாசிச அணுகுமுறை என தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறு என்ன? என்றும் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கான கல்வி நிதியை ஒதுக்க முடியும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள் மத்திய அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் ம்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் மும்மொழி கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.